பொதுவாகவே அனைவரும் அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை விரும்புவது வழக்கம்.
இதற்கு பல வகையான அழகு சாதனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் அழகாக இருக்க, சருமப் பராமரிப்பைத் தவிர, புருவ முடியையும் கவனிக்க வேண்டும்.
முகத்தில் இருக்கும் புருவ முடிக்கும் அதிக கவனிப்பு தேவை. எனவே உங்கள் புருவ முடி உதிராமல் இருக்க இரவில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையானவை
- ஆமணக்கு எண்ணெய்
- கற்றாழை ஜெல்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் சேர்க்கவும்.
- அதன் பிறகு, கற்றாழை இலைகளில் இருந்து ஜெல்லை பிரித்தெடுக்கவும்.
- அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஆமணக்கு எண்ணெயுடன் கலக்கவும்.
- இப்போது அதை பிரஷ் மூலம் புருவ முடியில் தடவவும்.
- இப்படியே 10 முதல் 15 நிமிடங்கள் விடவும்.
- அதன் பிறகு பருத்தி மற்றும் தண்ணீரின் உதவியுடன் அதை சுத்தம் செய்யவும்.
- இதைச் செய்த பிறகு, பிரஷ் மூலம் புருவ முடியில் மட்டும் ஆமணக்கு எண்ணெயைத் தடவவும்.
- இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், புருவங்கள் மிகவும் அடர்த்தியாகத் தோன்றும்.