எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உறைய வைக்கப்பட்ட மீன் மற்றும் இறைச்சியை கொள்வனவு செய்யும் போது விசேடமாக அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
பொதி செய்யப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும் போது அவற்றின் காலாவதி திகதி மற்றும் அடங்கியுள்ள பொருட்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் உபுல் ரோஹண மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
பண்டிகைக் காலத்தில் உணவு விற்பனை நிலையங்களை பரிசோதிப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் உபுல் ரோஹண மேலும் தெரிவித்தார்.







