இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வெளியேற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த ஆசிரியர் தினமும் குடித்துவிட்டு பாடசாலைக்கு வரும் அந்த ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளதாகவும் தகாத வார்த்தை பேசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டியுள்ளார்.
அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கியதுடன் ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓட குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்துள்ளனர்.