நேற்றைய தினம் (09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சாதாரண பொதுமக்களின் ஒருவேளை சாப்பாட்டிலே புதிய கறி வகைகள் சேர்க்கப்படுவதில்லை என ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இப்போது இருந்த கறி வகைகளும் குறைந்துள்ளன. இன்று மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.
இன்று மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் போசாக்கு இன்மை, தொழில்வாய்ப்பு இன்மை, இளைஞர்களின் விரக்தி மனநிலை, அனைத்தும் இந்த நாட்டின் சமூக பொருளாதார கட்டமைப்பினை சூழ்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த பிரச்சினைகளுக்கு நாங்கள் ஒரே தடவையில் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது முடியாமல் இருக்கும். ஆனாலும் இவை அனைத்தையும் தீர்ப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்தை நாங்கள் கொண்டிருக்க வேண்டும் என்று ரஞ்சித் பண்டார தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.