December 14, 2025
மக்களுக்கு எச்சரிக்கை…
புதிய செய்திகள்

மக்களுக்கு எச்சரிக்கை…

Jun 3, 2024

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடுமென வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின்  சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்கள் பலத்த காற்றுடன் கொந்தளிப்பாக காணப்படுவதால்  கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *