Tamil News Channel

மக்கள் வாழ புதிய கிரகம் கண்டுபிடிப்பு

new planet

மனிதர்கள் வாழ்வதற்கு எற்ற சூழல் காண்ப்படக்கூடிய  புதிய கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.

பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிய இந்த கிரகத்திற்கு ‘Super Earth TOI-715 b’ என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த கிரகம்  கிரகங்களின் வானியல் தரநிலைகளின்படி, ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றிவருவதாகவும் பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் நாசா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஒளி ஆண்டு என்பது 9.7 டிரில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும்.

குறித்த கிரகத்திற்கும் அதனை அருகிலுள்ள நட்சத்திரத்திற்கும் இடையிலான தூரம் மேற்பரப்பில் நீர் உருவாவதற்கு பொருத்தமான வெப்பநிலையை வழங்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படும் என நாசா அறிவித்துள்ளது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts