January 13, 2026
மன்னாரில் புதிய காற்றாலை..!
News News Line Top Updates புதிய செய்திகள்

மன்னாரில் புதிய காற்றாலை..!

Feb 21, 2024

மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கு கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதே பகுதியில் 100 மெகாவோட் காற்றாலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய காற்றாலை 50 மெகாவோட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவோட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்களும் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும்  தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *