மாத்தளை மாவட்டம் வரக்காமுறை பிரதேசத்தில் நேற்று (25) இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தொன்றில் 31 வயதுடைய பெண் ஒருவரும் , 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.