Tamil News Channel

மோனா லிசா ஓவியத்தை தாக்கிய இரு பெண்கள்..!

உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றிய சம்பவம்  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

16 ஆம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியம் பிரான்ஸின் தலைநகர், பாரிஸ் உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மோனா லிசா ஓவியம் இதற்கு முன்பாகவும் பலமுறை சேதப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியில், “உணவு அக்கறை” என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்த இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப் ஊற்றுவதை காண முடிகின்றது.

மேலும், தாக்குதல் பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு ‘ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு’ உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய் வாய்ப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts