யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெய்த மழையில் அச்சுவேலி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், யாழ். நகர் பகுதியில் 35.8 மில்லி மீற்றர், வடமராட்சி அம்பனில் 34.4 மில்லி மீற்றர், தெல்லிப்பழையில் 33.3 மில்லி மீற்றர், நயினாதீவில் 29.1 மில்லி மீற்றர், சாவகச்சேரியில் 24.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இன்றைய தினம் திங்கட்கிழமையும் யாழில் மழை பெய்து கொண்டு இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.