போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் யாழில் உள்ள மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நகர பகுதியில் வியாபார நோக்கத்துடன் ஆயிரத்து 100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த மருந்தகத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது பொலிஸாரினால் மேலும் இரண்டு பெட்டிகளில் சுமார் 250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த மாத்திரைகள் வலி நிவாரணியாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும், சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.