லண்டனில் உள்ள பாடசாலைகளில் இலவச மதிய உணவுக்கான திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக லண்டனின் மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.
பிரித்தானியா முழுவதும், குழந்தைகள் தங்கள் பெற்றோர் யுனிவர்சல் கிரெடிட் வருமான ஆதரவு மற்றும் குழந்தை வரிக் கடன் போன்ற பலன்களைப் பெறுபவர்கள் என்றால், பாடசாலை உணவை இலவசமாகப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த திட்டத்திற்கு 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு140 மில்லியன் பவுண்ஸ் பணத்தொகையை செலவிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் கடந்த ஆண்டு இலவச உணவு திட்டத்திற்காக லண்டன் மேயர் 135 மில்லியன் பவுண்ஸ்களை செலவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்புடைய அமைப்பொன்று முன்னெடுத்த ஆய்வில், லண்டனில் விலைவாசி உயர்வு காரணமாக 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் சுமார் 35 சதவிகிதத்தினர் குறைவான அளவுக்கு மட்டுமே உணவு பண்டங்களையும் அத்தியாவசிய பொருட்களும் வாங்குவதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், 41 சதவிகிதத்தினர் குறைந்தளவிலான தண்ணீர், மின்சாரம் அல்லது எரிவாயுவை பயன்படுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.