Tamil News Channel

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீர்ரர்களுக்கிடையில் இடம்பெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் (09) மாலை 6:30 மணியளவில் சூரத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணியும் ஹர்பஜன் சிங் தலைமையிலான Manipal Tigers அணியும் மோதவுள்ளன.

புள்ளிப்பட்டியலில் 2 ஆவது நிலையில் காணப்படும் Urbanrisers Hyderabad அணி முதலாவது தகுதிப் போட்டியில் Manipal Tigers அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

புள்ளிப்பட்டியலில் முதலாவது நிலையில் காணப்படும் Manipal Tigers அணி முதலாவது தகுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது தகுதிப் போட்டியில் கௌத்தம் கம்பீர் தலைமையிலான India Capitals அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேரியது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts