மதுரங்குளிய, விருதோடை பிரதேசத்தில் நேற்று இரவு 09.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும், விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளின் விளக்குகள் இயங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here