November 18, 2025
ஹோமாகம பிரதேச சபை தவிசாளர் கசுன் ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல்!
இலங்கை அரசியல் உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

ஹோமாகம பிரதேச சபை தவிசாளர் கசுன் ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல்!

Oct 30, 2025

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு அடையாளம் தெரியாத நபரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தன்னை “ஹந்தயா” என அறிமுகப்படுத்திய நபர், கடந்த 27ஆம் திகதி நண்பகலில், பொதுமக்கள் தினம் நடைபெற்று கொண்டிருந்தபோது அலுவலக கைப்பேசிக்கு அழைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *