அடுத்த ஆண்டு (2026 ஜனவரி) முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் கல்வி அமைச்சின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சு உறுதிப்படுத்தியதையடுத்து, இதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சின் இந்த முடிவுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

“இந்த முடிவு எந்தவொரு உளவியல் அல்லது கல்வி ஆய்வின் அடிப்படையிலும் எடுக்கப்படவில்லை. அரசு இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், உயர்தரப் பரீட்சைக்குப் பின் பாடசாலைகள் மீண்டும் திறக்கும்போது, ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்,”
என்றார்.

அதேவேளை, சங்கம் அதிகாரிகள் தரப்புடன் கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here