நாட்டிலுள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் நாளை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச நுழைவு வழங்கப்படும் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி வரும் உலக குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விசேட நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி தெரிவித்துள்ளார்.
இதனால், தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்கா போன்றவற்றை சிறுவர்கள் இலவசமாக பார்வையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.






