கிழக்கு சூடானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு சூடானில் உள்ள அணைக்கட்டு ஒன்று உடைந்துள்ளது.
இந்த நிலையில் அணைக்கட்டிலிருந்து வெளியேறிய நீரில் அடித்துச்செல்லப்பட்டு சுமார் 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த சம்பவத்தில் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








