உத்தியோகபூர்வ தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பான பொதிகள் விசேட தபால் மூலம் அந்தந்த இடங்களுக்கு இன்று விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் விநியோகம் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு மொத்தம் 712,319 அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் 2ஆம் திகதி தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன், 8ஆம் திகதி விநியோகிப்பதற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.








