நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 41,866 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here