களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீனகொட பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 11 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியை ஒருவரைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here