தென் அதிவேக நெடுஞ்சாலையில் 29வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் வான் ஒன்றுடன் மோதியதைத் தொடர்ந்து கார் ஒன்று கவிழ்ந்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் வானின் பின்புறத்தில் கார் மோதியதைத் தொடர்ந்து இவ்வாறு கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து கவிழ்ந்த வாகனத்தை வீதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுத்தனர் என தெரிவிக்கப்படுகிறது.







