சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள வானளாவிய கட்டிடத்தின் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் காயமடைந்ததாக சவூதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் நான்கு எகிப்தியர்கள், மூன்று நேபாளிகள், இரண்டு இந்தியர்கள் மற்றும் இரண்டு சவூதி நாட்டவர்கள் அடங்குவர்.
சவூதி அரேபியாவின் இறையாண்மை வள நிதியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இந்த வானளாவிய கட்டிடம், அந்த நாட்டின் மிக உயரமான கட்டிடமாகும்.
சவூதி அரேபியாவிற்கும் யேமனின் ஹவுதி இயக்கத்திற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சவூதி அதிகாரிகளால் வெளியிடப்பட்ட ஆரம்ப தகவல்களின்படி, காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை.
(கோப்பு படம்)








