நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடல் பகுதிகளில் தற்காலிகமாக 60-70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here