தங்களின் அனுமதியின்றி கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெயர் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் தம்முடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கட்சியின் பெயரைப் பயன்படுத்த முடியாது என அப்போதே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், தொடர்ந்தும் அந்த பெயர் பயன்படுத்தப்பட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் கூறியுள்ளார்.








