சீனாவின் வடமேற்கு கிங்காய் மாகாணத்தின் சிங்காய் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

முதலாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

இது காலை 11:16 மணிக்கு (UTC 03:16) ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது ஏற்பட்டு 18 நிமிடங்களில் ரிக்டர் அளவில் 5.8 என்ற இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு நிலநடுக்கங்களினதும் ஆழம் 10 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்க மத்திய நிலையம் கிங்காய் மாகாண தலைநகர் சினிங்கில் இருந்து 244 கி.மீ  தொலைவில் அமைந்திருந்தது.

உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here