கொழும்பு கோட்டை மற்றும் பம்பலப்பிட்டிய புதிய கதிரேசன் ஆலயங்களின் 152வது ஆண்டு வேல் திருவிழா ஊர்வலம் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

தேர் ஊர்வலம் இன்று (28)காலை 7.30 மணிக்கு கோட்டை, கடற்கரை வீதியில் உள்ள கதிரேசன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிறது.

இரவு 8.30 மணிக்கு பம்பலப்பிட்டிய புதிய கதிரேசன் ஆலயத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்கரை வீதி, காஸ் வொர்க்ஸ் சந்தி, மெயின் வீதி, கான் கடிகார கோபுரம், YMBA சந்தி, லெய்டன் பஸ்டியன் வீதி, யோர்க் வீதி, பரோன் ஜயதிலக மாவத்தை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் காலி வீதி வழியாக பம்பலப்பிட்டியை அடையும்.

குறிப்பாக மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டிய ஊடாக செல்லும் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். ஊர்வலம் இரவு 7.00 மணிக்கு பழைய கதிரேசன் ஆலயத்தையும், 8.30 மணிக்கு புதிய ஆலயத்தையும் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊர்வலம் எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு பம்பலப்பிட்டிய புதிய கதிரேசன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, கோட்டை கடற்கரை வீதி கதிரேசன் ஆலயத்தை நள்ளிரவு 12.30 மணிக்கு வந்தடைய உள்ளது.

குறித்த நேரங்களில் ஊர்வல வழிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here