அனுமதியின்றி 75,000 மெற்றிக் தொன் அரிசி இன்று (29.12.2024) துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட 75,000 மெற்றிக் தொன் அரிசியில் 32,000 மெற்றிக் தொன் அரிசியும் 43,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகவும், சுங்கத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.
நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








