அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25வது சிரார்த்த தினமான இன்று (30) கொழும்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தேசிய அமைப்பாளர் சக்திவேல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.







