அமெரிக்காவால் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் நாட்டில் தரையிறங்கியுள்ளன.
தற்போது குறித்த ஹெலிகொப்டர்கள் இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளத்தில், முறைப்படியான பயன்பாட்டிற்கு முன்னரான பரிசோதனைகள் மற்றும் சோதனைப் பறப்புகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறித்த ஹெலிகொப்டர்கள் முக்கியமாக விமானிகளுக்கான பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படுவதுடன் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த வேளைகளில் மீட்பு பணியில் ஈடுபடுதல் (HADR), தேடுதல் மற்றும் மீட்பு, மற்றும் பொது சேவைப் பணிகளிலும் ஈடுபடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TH-57 ஹெலிகொப்டர்கள் உறுதியான, பன்முகப் பயன்பாட்டுப் பயிற்சி ஹெலிகொப்டர்கள் எனவும் இவை இலங்கை விமான படையின் பயிற்சித் திறனையும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளையும் பெரிதும் மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.








