அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததைத் தொடர்ந்து, இருநாட்டு வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவர் தனது Truth Social பதிவில், “எனது நண்பர் பிரதமர் மோடியுடன் எதிர்வரும் வாரங்களில் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்காவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மோடி, “அமெரிக்கா-இந்தியா நட்புறவு நாடுகள். எங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள், கூட்டாண்மையின் முழு திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருக்கும்” என்றும் கூறினார்.








