நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபா காசோலைகளை வழங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் தொடுத்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக தவறியிருந்தார்.

வெள்ளவத்தையை சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் என்பவர் 2016ம் ஆண்டு ஜீலை மாதம் 9ம் திகதி அன்று கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து தலா பத்து மில்லியன் ரூபா காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக அவருக்கு எதிராக டக்களஸ் தேவானந்தாவால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சுகயீனம் காரணமாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் ஆஜராகவில்லை.

முன்னாள் அமைச்சரின் சட்டத்தரணி சுகயீனம் தொடர்பில் நீதிமன்றில் தெரிவித்த போதிலும், அவர்களால் மருத்துவ அறிக்கையை வழங்க முடியாமல் போனதால், முன்னாள் அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

எனவே, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here