அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இது தொடர்பாக, ட்ரம்பின் பெயரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரபூர்வமாக பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என குறிப்பிட்ட நெதன்யாகு, “அந்த முயற்சிகளுக்கு கண்டிப்பாக உலக மட்டத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார். இதற்காக நோபல் பரிசுக் குழுவுக்கு தனிப்பட்ட பரிந்துரை கடிதமொன்றும் அனுப்பியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் அரசும் ட்ரம்பின் பெயரை நோபல் பரிசுக்காக பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது” என ட்ரம்ப் கடந்த காலத்தில் வெளிப்படையாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

இதில் அரசியல் தலைவர்கள், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளடங்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here