பாராளுமன்ற நிலையியற் கட்டளை 126இற்கு அமைவாக அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சபாநாயகர், பிரதமர், சபைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஏனைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட எழுவர் அங்கம் வகிப்பர். 23 பெப்ரவரி அன்று அக்குழு நியமனம் தொடர்பான அறிவித்தலினை சபாநாயகர் வெளியிட்டார்.

குழு உறுப்பினர்கள்:

  1. ஜகத் விக்ரமரட்ன – சபாநாயகர்
  2. கலாநிதி ஹரிணி அமரசூரிய – பிரதமர்
  3. பிமல் ரட்னாயக்க – சபைத் தலைவர்
  4. சஜித் பிரேமதாச – எதிர்க்கட்சி தலைவர்
  5. ஹர்ஷண நாணயக்கார
  6. பத்மநாதன் சத்தியலிங்கம்
  7. நிஹால் அபேசிங்க

அரசியலமைப்பின் 41 ஆம் உறுப்புரையின் அட்டவணையின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களாலும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற அவற்றின் அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகள் ஆகியவற்றின் பிரயோகம், செயலாற்றுகை மற்றும் நிறைவேற்றுகை உள்ளடங்கிய அவற்றின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகளை பரிசீலிக்கவும், அவை தொடர்பில் தவிசாளர்களையும், உறுப்பினர்களையும், பணியாளர்களையும் அழைக்கவும் இந்த குழுவிற்கு அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here