2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையவழி சேவை மூலம் சரிபார்க்கலாம் என தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டன, அதன் பின்னர் பரீட்சார்த்திகளுக்கு மீளாய்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.doenets.lk/examresults







