நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஏற்பட்ட டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 99,634 ஆகும், இதேநேரம் மரண விகிதம் 0.077% ஆக பதிவாகியுள்ளது.

மேலும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.53% மேல் (52,340) மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

மாவட்ட ரீதியாக அதிக நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 21,136  ஆகும்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19,569 நோயாளர்களும், கண்டியில் இருந்து 7,547 பேரும், களுத்துறையில் இருந்து 6,339 பேரும் மற்றும் மாத்தறையில் இருந்து 6,273 பேரும் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில் அதிக டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.

மேலும் ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும் ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 4,144 ஆகும்.

37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதி உயர் ஆபத்து வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன, சுகாதார துறையினர் பொதுமக்களிடம் நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here