2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரச சம்பள உயர்வின் இறுதி கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்தார்.

இதற்கமைய வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சலுகைகள் வருமாறு:

வைத்தியர்கள்: DAT கொடுப்பனவு 70,000 ரூபாயில் இருந்து 95,000 ரூபாவாக அதிகரிப்பு.

தாதியர் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள்: விசேட கடமை கொடுப்பனவு 6,000 ரூபாவில் இருந்து 12,000 ரூபாயாக இரட்டிப்பு.

பல்கலைக்கழக கல்வியாளர்கள்: மாதாந்த கல்வி கொடுப்பனவு 25,000 ரூபாவால் அதிகரிப்பு.

பொலிஸ் அதிகாரிகள்: மாதாந்தம் மேலதிகமாக 10,000 ரூபாய் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவு.

சிறைச்சாலை அதிகாரிகள்: இடர் கொடுப்பனவு 8,000 ரூபாவில் இருந்து 16,000 ரூபாயாக இரட்டிப்பு.

கிராம சேவகர்கள் பயண கொடுப்பனவு 1,600 ரூபாவில் இருந்து 4,000 ரூபாவாக அதிகரிப்பு.

நிறைவேற்று அதிகாரிகள்: போக்குவரத்து கொடுப்பனவு 50,000 ரூபாவில் இருந்து 100,000 ரூபாவாக இரட்டிப்பு.

முப்படையினர்: தினசரி உணவு கொடுப்பனவு அதிகரிப்பு.

ஓய்வூதியதாரர்கள்: 2020 முதல் 2024 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் மேலதிகமாக 2,500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவு.

பெரும்பாலான கொடுப்பனவு அதிகரிப்புகள் 2027 ஏப்ரல் அல்லது ஜூலை மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். சில உயர்வுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டு மிகுதித் தொகை 2028 ஆம் ஆண்டில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here