இலங்கை அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்பவும், அரச நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கவும் சுமார் 110,000 பேரை மேலும் சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
2027 வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அரச துறையில் உள்ள 148,940 வெற்றிடங்களை நிரப்ப ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஊழியர் முகாமைத்துவ அதிகாரிகள் குழு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் இந்த அனுமதியை வழங்கியுள்ளன.
இதில் ஏற்கனவே சுமார் 40,000 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 110,000 பேரை இணைக்க எதிர்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
திணைக்கள சேவைகள் மற்றும் ஏனைய நிறைவேற்று சேவைகளில் உள்ள பதவி உயர்வு சிக்கல்களையும், அகில இலங்கை சேவைகளுக்கு உள்ளது போல சீரமைக்கவும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இது அரச நிர்வாகத்தை வலுப்படுத்தி நவீனமயமாக்கும் அரசாங்கத்தின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








