அனுராதபுரம், ருவன்வெலி மஹா சாய அருகில் இடம்பெறும் சத்தியாகிரக மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் இருக்கும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருடன், ராஜாங்கனை சத்தாரதன உள்ளிட்ட சிவில் குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கஸ்ஸப தேரர் உள்ளிட்ட உண்ணாவிரத மைதானத்தில் இருந்தவர்கள் நடத்திய தாக்குதலில், ராஜாங்கனை சத்தாரதன என்பவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.







