ருவன்வெலி மஹா சாய அருகில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் இருக்கும் பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நாளை (13) கொழும்பு குற்றப்பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை பிரிவுக்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 17ம் திகதி விஹார மஹாதேவி பூங்கா வளாகத்தில் நடந்த சத்தியாகிரகத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தில் பொலிஸார் தன்னை தாக்கியதாக ஊடகங்களுக்கு அவர் கூறிய கருத்து தொடர்பாக நடக்கும் விசாரணைக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்று (11) காலை 10.00 மணிக்கு வருமாறு அழைப்பு அறிவித்திருந்தும், அவர் வரவில்லை எனவும், அது குறித்து அறிவிப்பு எதனையும் வழங்கவில்லை எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இதனால் நாளை (13) வருமாறு உடமலுவ பொலிஸ் மூலம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.








