மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று திங்கட்கிழமை (20/1/2025) சுற்றிவளைக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அரிசிக் கடையில் இந்திய நாட்டு அரிசியை பொதி மாற்றி கலப்படம் செய்த தகவல் கிடைத்ததக்காகவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரிசிக் கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here