இலங்கையின் நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளமான parliament.lk – இல் வைத்தியர் அர்ச்சுனாவினுடைய தனிப்பட்ட தகவல்களில் அவர் பௌத்த மதம் என வெளியிடப்பட்டது போன்று படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் (வெற்றி Tv) https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3535 என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட்ட போது வைத்தியர் அர்ச்சுனாவின் தகவல்களில் அவர் இந்து என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்ற பிரவேசத்தின் போது அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களை பாராளுமன்றத்திற்கு வழங்க வேண்டும்.
அந்த தகவல்களை இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான parliament.lk – இல் வெளியிடப்படும்.
இவ்வாறு வெளியிடப்பட்ட தகவல்களில் ஏதாவது பிழைகள் இருப்பின் அதனை நாடாளுமன்றத்தின் தகவல் சேகரிப்பு குழுவிடம் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளமுடியும்.
அவ்வாறு ஏற்கனவே அவருடைய தகவல்களில் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம் இருந்தும் நாங்கள் இது குறித்து ஆராய்ந்த போது பிழைகள் இருந்ததாக எமக்கு தெரியவில்லை.
எது எப்படியோ சமூகவலைத்தளங்களில் தவறான தகவல்களை பகிர்ந்து பிழையாக வழிநடுத்துவதை பொறுப்புள்ள ஊடகமாக நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இதே வேளை சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவல் குறித்த படம் உண்மையாக இருந்தால் அதனை உடனடியாக திருத்திய நாடாளுமன்றத்திற்கும் நன்றி பகிர்கின்றோம்.






