கிருலப்பனை கலிங்க மாவத்தையில் உள்ள கொலோம்தோட்டை சரசவி உயன வீட்டுத் தொகுதியில் 70 வயதுடைய பெண் ஒருவர் நேற்று பிற்பகல் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வீட்டுத் தொகுதியின் இரண்டாவது மாடியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது பெண் வீட்டில் தனியாக இருந்ததாகவும், வழியில் தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு அவரது மகள் வேலைக்கு சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here