அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா பெறுமதி வரி செலுத்தாமல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட டபிள்யூ.எம்.மென்டிஸ் மற்றும் கம்பனியின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், அந்தோனி ரந்தேவ் தினேந்திர ஜோன் ஆகியோரின் பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க மீண்டும் நிராகரித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தாக்கல் செய்த வழக்கில், 2016 மற்றும் 2019 க்கு இடையில் செலுத்த வேண்டிய VAT வரியை பிரதிவாதிகள் செலுத்தத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

திங்கட்கிழமை, அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஏனைய பிரதிவாதிகளுக்கு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்காததற்காக சிறைத்தண்டனை விதித்தார்.

பிரதிவாதிகள் அர்ஜூன் அலோசியஸ், அந்தோனி ரன்தேவ் தினேந்திர ஜோன் மற்றும் கே. பிரசன்ன குமாரசிறி ஆகியோருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here