போர்ட் சிட்டி கடற்கரையிலிருந்து அலையில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி போர்ட் சிட்டி கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது அந்த இளைஞன் இந்த அனர்த்தத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இளைஞரை மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்து, பின்னர் அவரை விடுவித்தனர்.

18 வயதான இளைஞனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் 38015 ஆரியரத்ன, பொலிஸ் சார்ஜென்ட் 66269 பிரசாத், பொலிஸ் கான்ஸ்டபிள் 90744 நிலந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 96793 ஏகநாயக்க ஆகியோர் இந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here