இன்று காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

2006ஆம் ஆண்டு 05 இலக்க பணத் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவை குற்றவாளியாகப் பெயரிடுவதற்கு போதுமான சாட்சியங்கள் காணப்படுவதாக, சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here