ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாக பெற்றுள்ளார்.

ஒரு ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் நடைபெற்றுவரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரில் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் ஜனவரி 12ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இரு வாரங்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. இதில் ஆடவர் டென்னஸ் தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாக தகுதிபெற்றுள்ளார். இவர் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது இது 5-வது முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here