நுவரெலியாவில் தங்கும் விடுதி ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸ் காவலில் இருந்து தப்பிய 27 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் நவம்பர் 12 ஆம் திகதி இரவு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கொலை நவம்பர் 10 ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகஸ்தோட்டை பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இடம்பெற்றதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

கொலை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், விசாரணை அதிகாரிகள் பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திரப்பனை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையில், குறித்த சந்தேகநபர் நவம்பர் 10 ஆம் திகதி தெரிப்பஹா பொலிஸ் பிரிவில் காவலில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here