ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நேற்று (12) வரவு செலவு திட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (13) பாராளுமன்றத்தில் ஆரம்பமாகிறது.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்டம் மீதான இந்த விவாதம் நவம்பர் 13 முதல் 20 வரை 7 நாட்களுக்கு நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதன் பின்னர் குழு நிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்கள் டிசம்பர் 14 வரை நடைபெறும்.
2027 வரவு செலவு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவு விவாதம் இடம்பெறும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து, சனிக்கிழமைகள் உட்பட ஒவ்வொரு நாளும் பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








