அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குழுவில் கஸ்ஸப தேரர் தவிர மேலும் 3 தேரர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை மனநல மருத்துவ பரிசோதனைக்கும், போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ராஜாங்கனை சத்தாரதன தலைமையிலான குழுவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கஸ்ஸப தேரர் உட்பட குழுவினர் நேற்று (12) பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டிருந்தனர்.








